வேர்க்கடலை சாதம் (Peanut Rice).
தேவையான பொருட்கள் :
சமைத்த சாதம் - 3 கப் (உதிரியாக வடித்துக் கொள்ளவும்),
வேர்க்கடலை - 1/2 கப்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 (காரத்திற்கேற்ப),
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1சிட்டிகை,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு .
செய்முறை :
கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பாதி வேர்க்கடலை, உளுத்தம்
பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் வெள்ளை எள் சேர்த்து
பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை அணைக்கவும்.
இதை நன்றாக ஆறவிட்டு, மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கரகரப்பாக (powder)
அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை
மற்றும் பெருங்காயத் தூள் தாளிக்கவும்.
மீதமுள்ள பச்சை அல்லது வறுத்த வேர்க்கடலையை அதில் சேர்த்து சிறிது வதக்கவும்.
இப்போது வடித்து வைத்துள்ள சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து
கிளறவும்.
நாம் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை மசாலா பொடியைச் சாதத்தின் மீது தூவி,
சாதம் உடையாமல் மெதுவாக நன்றாகக் கலக்கவும்.
மிதமான தீயில் 2 நிமிடங்கள் மூடி வைத்து இறக்கினால், மணமணக்கும் சுவையான
வேர்க்கடலை சாதம் தயார்.
இது மதிய உணவுக்கு (Lunch Box) ஏற்ற ஒரு அருமையான வெரைட்டி ரைஸ் ஆகும்.
0
Leave a Reply