மதுரையில், சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்து தமிழ் நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் டோனி இன்று திறந்து வைக்கிறார் !
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் ஆஸ்பத்திரி அருகில் 11 ஏக்கர் நிலப்பரப்பில், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. பயிற்சி ஆடுகளங்கள், வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை, கார் பார்க்கிங் . மழை பெய்தால் விரைவாக தண்ணீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகள் என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமான முறையில் ரூ.325 கோடி செலவில், . 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் கேலரி அமைக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 7,300 இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு,இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் மைதான வல்லு நர்களுடன் ஆலோசித்து மின்கோபுரம் அமைக்ப்பட்டுள்ளது.. மைதானம் அதன் சுற்றுப்பகுதியை கண்காணிக்க 197 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்து தமிழ் நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இது தான். எதிர்காலத்தில் இங்கு டி.என்.பி.எல்.,ஐ.பி.எல்., . ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.இதை இந்திய முன்னாள் கேப்டன் டோனி இன்று திறந்து வைக்கிறார்.
0
Leave a Reply