மூன்றாவது புத்தகத் திருவிழாவினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பொதுமக்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா செப்டம்பர் 27.09.2024 முதல் அக்டோபர் 07.10.2024 வரை கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. மேற்படி புத்தகக் கண்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பொதுமக்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
அதன்படி, வரும் 08.09.2024 அன்று கட்டுரைப்போட்டிகளும், வரும் 15.09.2024 அன்று கவிதைப் போட்டிகளும், வரும் 21.09.2024 அன்று புத்தகக்குறிப்பு எழுதுதல் (கரிசல் இலக்கியம் தொடர்பான புத்தகங்கள்)-1 புத்தகம் போட்டிகளும், வரும் 22.09.2024 அன்று புத்தக ஆய்வு (Book Review) என்ற தலைப்பில் பேச்சுப் போட்டிகளும் அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.
பொதுமக்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் தவிர அனைவரும் பங்கேற்கலாம். மேற்படி போட்டிகள் குறித்து விரிவான தகவல்களை அறிய தொடர்புடைய பொறுப்பு நூலகர்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்டஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
போட்டிகள் நடைபெறவுள்ள இடம் பொறுப்பு நூலகர்
அறிவு சார் மையம், அருப்புக்கோட்டை என்.நடராஜன், (9994025279)
அரசு பொது நூலகம், சாத்தூர். சு.பாலசுப்பிரமணியன் (9751042959)
அறிவு சார் மையம், சிவகாசி க.அ.மு.ராஜா (9994080713)
அறிவு சார் மையம், திருவில்லிபுத்தூர் சோ.மலர்வேந்தன் (9500432396)
அறிவு சார் மையம், விருதுநகர் வி.செந்தில்குமார் (7010991170)
அரசு பொது நூலகம், இராஜபாளையம் இல.ராமகிருஷ்ணன் (9487053753)
அரசு பொது நூலகம், வத்திராயிருப்பு சி.வெள்ளைச்சாமி (9952243318)
அரசு பொது நூலகம், வெம்பக்கோட்டை ஸ்.லெனின் (9789688869)
அரசு பொது நூலகம், திருச்சுழி சு.பாஸ்கரன் (9944253609)
அரசு பொது நூலகம், நரிக்குடி ஜி.ராஜா(9865769118)
அரசு பொது நூலகம், காரியாபட்டி பி.சுரேஷ்கண்ணன் (9786112369)
0
Leave a Reply