ராஜபாளையத்தில், குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர், சரிசெய்ய பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42வது வார்டு ஆர்.ஆர்.நகர் பகுதி சத்திரப்பட்டி சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தனியார் பைப் லைன் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பதிக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் குடிநீர் வீணாக சாலையில் சென்றன. மேலும் அந்த சாலை முழுவதும் குழி தோண்டி வைத்துள்ளனர். இதனால் கனரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதேபோல் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்வதால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கவும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து எதிர்பார்த்துள்ளனர்.
0
Leave a Reply