25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சிங்கப்பூரில்.. வரலாற்றிலேயே First time - 25 ஆண்டு முயற்சிக்கு விடை கொடுத்த
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிங்கப்பூரில்.. வரலாற்றிலேயே First time - 25 ஆண்டு முயற்சிக்கு விடை கொடுத்த "Secret"

சிங்கப்பூரின் Gardens by the Bay-யில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்டு வந்த அரிய Costus fenestralis என்ற Spiral Ginger தாவரம், வரலாற்றில் முதல்முறையாக மலர்ந்துள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காபோன் (Gabon)-ஐ தாயகமாகக் கொண்ட இந்தத் தாவரம், 2016-ஆம் ஆண்டில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் பூவின் உண்மையான நிறமும் வடிவமும் இதுவரை யாருக்கும் தெரியாத மர்மமாக இருந்தது, தற்போது மலர்ந்துள்ள பூவில் இளஞ்சிவப்பு நிற இதழ்களும், நடுவில் பிரகாசமான மஞ்சள் நிறப் பகுதியும் காணப்படுகின்றன.

உலகிற்கு இந்தத் தாவரத்தின் முழுமையான தோற்றத்தை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ள இந்த நிகழ்வு, பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பொறுமையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளின் வெற்றியாக Gardens by the Bay நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது சிங்கப்பூரின் பசுமைப் பாரம்பரியத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News