ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் தொடர்மழையால் ஊருணிகள் நிரம்பின .
ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. சில கண்மாய்கள் நிரம்பி மதகு வழியாக மறுகால் பாய்ந்து மற்ற கண்மாய்களுக்கு செல்கின்றன. ராஜபாளையம் தாலுகாவில் உள்ள அலப்பச்சேரி கண்மாய், புதுக்குளம் கண்மாய், புளியங்குளம் கண்மாய், கிருஷ்ணபேரி கண்மாய், செட்டிகுளம், கடம்பன்குளம், கொத்தங்குளம், செங் குளம் கண்மாய், மேல இழுப்பன் குளம் கண்மாய், வாண்டையார் குளம் கண்மாய், - பிரண்டைகுளம், ஆதியூர் கண்மாய், சீவலப்பேரி கண்மாய், சத்திரப்பட்டி வாகைகுளம் கண்மாய், தேவதானம் நகரிகுளம் கண்மாய், பெரியகுளம், சேத்தூர் பிராவடி கண்மாய், முகவூர் கண்மாய், வடகரை கண்மாய்கள் நிரம்பின.
இதனால்சுற்றுப்பகுதியில் உள்ள 15 ஆயிரம் ஏக்கர்நிலம் பாசன வசதி பெறும்.தற்போதுபெய்துள்ள மழையால் நெற்பயிர்கள், வாழை, கரும்பு, தென்னை, மா,பலா மரங்கள் அதிகமாக சாகுபடி செய்ய விவசாயிகள் உழவு பணிகளை செய்து வருகின்றனர். மேலும் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஊருணிகளும் நிரம்பின.இந்த பகுதியில் உள்ள கிணறுகளில் அதிக அளவில் நீர் உள்ளது. விவசாயிகள் இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
0
Leave a Reply