25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாதுகாப்பு பணியில் இந்திய மோப்ப நாய்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாதுகாப்பு பணியில் இந்திய மோப்ப நாய்கள்

33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 26ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க விழா முதன்முறையாக மைதானத்துக்கு வெளியே, சென் நதியில் வித்தியாசமான முறையில் நடக்கிறது. தொடக்க விழாவை முன்னிட்டு சென் நதியின் கரையோரத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியை, போலிசார் தங்கள் கட்டப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த பகுதிக்குள் முன்கூட்டியே அனுமதி பெற்று இருப்பவர்கள் தவிர, வேறு யாரும் நுழைய முடியாது. இந்த கட்டுப்பாடுகள் தொடக்க விழா முடிந்த பிறகு தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 18 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 40 நாடுகளை சேர்ந்த ,1750 பாதுகாப்பு படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் ஒலிம்பிக் பாதுகாப்பு பணிக்காக இந்தியாவில் இருந்து 10 மோப்ப நாய்கள் பாரீஸ் சென்றுள்ளன. இந்த மோப்ப நாய்களை கையாள பயிற்சி பெற்ற, மத்திய அரசின் பல்வேறு ஆயுதப்படையை சேர்ந்த 17 பேர் சென்று இருக்கிறார்கள். இந்தியா பிரான்ஸ் நாடுகள் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த மோப்ப நாய்கள் சந்தேகத்திற்குரிய நபர்களின் இருப்பிடம், குண்டுகளை துல்லியமாக கண்டறிதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்படும் திறன் படைத்தவை. ஸ்டேடியம் பகுதியில் இவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். இந்தியாவில் இருந்து மோப்ப நாய்கள் வெளிநாட்டில் பாதுகாப்பு பணிக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.ஜூலை 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தடுக்கவும், பொது ஒழுங்கை நிலைநாட்டவும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News