இந்திய மாணவர்களின் புதுமைக்கு சர்வதேச அங்கீகாரம்.
16 வயதுடைய இந்திய மாணவர்கள் அரியானா அகர்வால், விவான் சாவ்சாரியா, அவ்யானா மேத்தா ஆகியோர் உருவாக்கிய"Plas-Stick" தொழில்நுட்பம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
புளியங்கொட்டையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், காந்தத்தின் உதவியுடன் நீரில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை அகற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்:
- சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
- குறைந்த செலவில் பயன்படுத்தலாம்.
- மின்சாரம் தேவையில்லை.
- கிராமப்புற குடிநீர் சுத்திகரிப்புக்கு பயன்படும் வாய்ப்பு உள்ளது.
இந்த கண்டுபிடிப்புக்காக இம்மாணவர்கள் The Earth Prize 2026 Global Winner விருதை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்
0
Leave a Reply