25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் போலி கணக்குகள் நீக்கம் உண்மையான பயணியரும் பாதிப்பு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் போலி கணக்குகள் நீக்கம் உண்மையான பயணியரும் பாதிப்பு!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர். சி.டி.சி., இணையதளத்தில், ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி உள்ளது. அதை பயன்படுத்துவதற்கு, இந்த இணையதளத்தில் தங்கள் முகவரியை பதிவு செய்து, கணக்கு துவங்க வேண்டும். அந்த ஐ.டி., மற்றும் கணக்கை பயன்படுத்தி தான், முன்பதிவு செய்ய முடியும்.

அதன்படி, மொத்த பயணியரில் 82 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். பெரும்பாலான ரயில்களில் முன் பதிவு துவங்கும் நாளில், 10 நிமிடத்துக்குள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால், டிக்கெட் எடுக்க முடியாமல் பயணியர் வருகின்றனர். ஏமாற்றமடைந்து

மேலும், தட்கல் முன்பதிவு முறையிலும் முறைகேடு நடக்கிறது. அடிக்கடி தொழில்நுட்ப கோளாறும் ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என பயணியர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த புகார்கள் அடிப்படையில், 2.5 கோடி போலி கணக்குகளை இணையதளத்தில் இருந்து, ஐ.ஆர். சி.டி.சி., கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நீக்கியது.

இதில், உண்மையான பயனாளர்களின் கணக்குகளும் முடங்கி உள்ளன. இதனால் அவர்களால் 'ஆன்லைன்' டிக்கெட் முன் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News