25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


பேராசைப்படாமல் நிதானமாக செயல்பட்டு  ஒரு டஜன் படங்களை கைவசம்  வைத்துள்ள ஜெயம் ரவி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பேராசைப்படாமல் நிதானமாக செயல்பட்டு ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள ஜெயம் ரவி

 சினிமாவை பொறுத்தவரையில் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல தான். ஒரு படம் வெற்றி பெறுமா, தோல்வி பெறுமா என்பது ரசிகர்களின் கையில் மட்டுமே இருக்கிறது.அரசியல்வாதிகளுக்காவது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் வெற்றி, தோல்வி பயம் வரும். ஆனால் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு தங்கள் படம் வெளியாகும் ஒவ்வொரு முதல் நாளும் அந்த பயம் இருக்கும். இதில் சில நடிகர்கள் அதிக பண ஆசையில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்கள்.

தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் நடிப்பில் பட்டையை கிளப்பினாலும் தயாரிப்பில் இறங்கினார்கள். ஆனால் அவர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கும் விதமாக படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் தனுஷ் சில வருடங்களாக படம் தயாரிப்பதையே விட்டுவிட்டார்.சிவகார்த்திகேயன். படம் தயாரித்து கடனில் அவதிப்பட்டு அதை அடைக்க பல பிரச்சனைகளை சந்தித்தார்..

“போதும் என்ற மனமே பொன்னானது” என்பது போல வாழ்ந்து சினிமாவை தவிர அவர் வேறு எந்த தொழிலிலும் கவனம் செலுத்த விரும்பவில்லை. தேவையில்லாமல் எதிலாவது தலையை கொடுத்து மாட்டிக்கொண்டால் அதன் பிறகு நிம்மதி தொலைந்து விடும் என்கிறார். தனக்கு எந்த கதாபாத்திரம் வருமோ அதை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஜெயம் ரவி கைவசம் இப்போது இறைவன், சைரன் மற்றும் பிரதர் போன்ற படங்கள் இருக்கிறது. நிதானமாக செயல்பட்டு இப்போது ஒரு டஜன் படங்களை கைவசம் ஜெயம் ரவி வைத்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News