பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்க பெருமளவு உதவும் சணல் பைகள்.
சணல் என்பது 'கோர் கோரஸ்' நார் இழைகளை கொண்ட தாவரம் ஆகும். சணல் இழைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த, செலவுகுறைந்த இயற்கை இழை ஆகும். சணல் இழையை பயன்படுத்தி பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில், சணல் பைகள் மிகவும் பிரபலமானவை. நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் காற்று ஊடுருவும் இயல்பு காரணமாக, பல்வேறு பொருட்களை கையாள உதவும் மிகச்சிறந்த தேர்வாக உள்ளது.
பிளாஸ்டிக் பைகளால், நிலம், நீர் மாசுபடுகிறது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.பிளாஸ்டிக்பைகளுக்கு மாற்றாக மக்கள் பயன்பாட்டுக்கு உலக நாடுகள் பலவும் சணல் பைகளை முன்னிறுத்தி வருகின்றன. பிளாஸ்டிக் பைகள் மண்ணில் வீசப்படும் போது அவை மக்குவதில்லை. மேலும், பிளாஸ்டிக் கழிவு மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களை மடிந்து போக செய்வதுடன், மண் மலடாகும் நிலையும் உள்ளது. ஆனால், சணல் உடனே மக்கி உரமாகிவிடும். எனவே, கட்டுப்பாடற்ற பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்க பெருமளவு சணல் பைகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். பொதுவாக, சணல் இந்திய துணைக்கண்டத்தில்தான் பெருமளவு பயிரிடப்படுகிறது.
சணல் மூலம் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற பைகளை உருவாக்கும்போது, உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.இதனால், இந்தியாவில் சணல் சாகுபடி செய்யும் பல லட்சம் விவசாயிகள் பொருளாதார வளர்ச்சியை எட்ட மிகப்பெரிய வாய்ப்பும்,சணல் பைகள் உற்பத்தி செய்யும் பல ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சணல் பயிர் வெறும் 4 மாதங்களில் விளைந்து அறுவடை பருவத்தை எட்டும். மிகக்குறைந்த நீர் போதும். உரத்துக்கான தேவையும் பெரிய அளவில் இருக்காது.
0
Leave a Reply