பருப்பு சாதம்...
தேவையானபொருட்கள்-200 கிராம்அரிசி,100 கிராம்துவரம்பருப்பு,சிறிதளவு புளிகரைசல்,1வெங்காயம்,1 தக்காளி,1உருளைக்கிழங்கு,3கேரட் (சிறியது),1 கத்தரிக்காய்,அரை தேக்கரண்டிபெருங்காயம்,1 தேக்கரண்டிசாம்பார் பொடி, சிறிதளவுமஞ்சள் தூள், பீன்ஸ் (தேவையான அளவு)4 பூண்டு பல் ,கடுகு, உளுந்து. சீரகம் சிறிதளவு தாளிக்க ,சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை - குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்து அதன் பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் காய்கறிகள் அனைத்தும் சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.பின் அதில் மேலே கூறிய அளவில் பெங்காயம், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் அரிசி, புளி கரைசல் மற்றும் துவரம் பருப்பு சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.அதில் சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து குக்கரைமூடவும்.விசில் வந்தவுடன் குக்கரை இறக்கவும்.இப்போது பருப்பு கலவை சாதம் பரிமாற ரெடி.
0
Leave a Reply