25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


மக்களை நேசித்த மகராசி கமலா நேரு,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்களை நேசித்த மகராசி கமலா நேரு,

37 வயது வரை தான் வாழ்வு வாய்த்தது இந்த அன்பு மனம் கொண்ட பெண்ணிற்கு. இன்னும் சில வருடங்களாவது காலம் கருணை காட்டியிருக்கலாம்.கமலா நேரு, உடல்நலம் நலிவுற்றவர். எனினும் மனநலனுக்கோ உள்ள உறுதிக்கோ எக்குறையும் இல்லை.உயர் சிகிச்சைக்காக வெளிநாடு கிளம்பும் முன் , காந்தியைச் சந்தித்து ஒரு வாக்குறுதியைப் பெறுகிறார். தான் திரும்பி வர மாட்டோம் என்று அவர் உள் மனதின் குரல் சொல்லியிருக்கலாம்.

சுயராஜ் பவனில் , ஒரு சிறிய மருந்தகத்தைக் கமலா நேரு தொடங்கியிருந்தார். அதை மருத்துவமனையாக்கி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பது அவர் கனவு. எனவே, கிளம்பும் முன் ,, தான் ஒரு வேளை வராமல் போனாலும் அதை மருத்துவமனையாக மாற்றி விட வேண்டும் என்ற சொல்லுறுதியைக் காந்தியிடம் கேட்டுப் பெற்ற பிறகே சிகிச்சைக்குக் கிளம்புகிறார். காந்தியும் தன் சக்திக்கு உட்பட்டு அதை நிறைவேற்றுவதாக வாக்களிக்கிறார்.

1939 பிப்ரவரி 19 ஆம் தேதி அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது காந்தியே அதை முன்னின்று நடத்தினார்.அது குறித்து மனதைத் தொடும் அழகான குறிப்பையும் காந்தி ஹரிஜன் இதழில் எழுதினார். Woman of spritual beauty என்று.எவ்வளவு பெரிய மருத்துவமனை. இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News