மீல்மேக்கர் முட்டை பொரியல்
தேவையான பொருட்கள் முட்டை 3, மீல்மேக்கர் 200 கிராம், வெஙகாயம் 50 கிராம், தக்காளி 100 கிராம், பச்சை மிளகாய் 5, கடுகு 1 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 டீஸ்பூன் எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் உப்பைச் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியன சேர்த்து வதக்க வேண்டும். பின் ஊற வைத்த மீல் மேக்கரைப் பிழிந்து பொடியாக நறுக்கி வாணலியில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். நன்றாக வதக்கி இறக்கும் போது சிறிது சீரகம் போட்டு இறக்க வேண்டும். இதுவே மீல் மேக்கர் முட்டை பொரியல்.
0
Leave a Reply