25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


போர்க்களத்தில் களமிறங்குமா மனித உருவ ரோபோக்கள்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

போர்க்களத்தில் களமிறங்குமா மனித உருவ ரோபோக்கள்?

மனிதர்களைப் போல இயங்கும் Humanoid Robots எதிர்காலத்தில் போர்களிலும் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீனாவில் நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ போட்டிகளில் பங்கேற்ற ரோபோக்கள் ஓட்டம், நடனம் மற்றும் குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை செய்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

இதைத்தொடர்ந்து, ராணுவப் பயன்பாடுகளுக்காக மனித உருவ ரோபோக்களை உருவாக்குவது தொடர்பாக சீனாவில் ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆபத்தான பகுதிகளில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களை அனுப்புவது, கண்காணிப்பு மற்றும் பிற ராணுவப் பணிகளில் அவற்றைப் பயன்படுத்துவது போன்ற வாய்ப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்கள் பாதுகாப்புத் துறையில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பட்டம் பெற்று வேலைக்கு செல்லப்போகும் ரோபோக்கள்

சீனாவின் ஹங்சோ ரோபோ பள்ளியில் 2 மாத கடுமையான பயிற்சிக்கு பிறகு 4 ரோபோக்கள் அதிகாரப்பூர்வமாக பட்டம் பெற்றுள்ளன.

வழிகாட்டி, ஆய்வு மற்றும் பியானோ வாசிக்கும் இந்த ரோபோக்கள் சீனா. தென்கொரியாவின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட உள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News