25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


விவசாயிகளுக்கு மக்காச்சோளம் செயல்விளக்கத்திடல் அமைத்திட மானியம் வழங்கப்படவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விவசாயிகளுக்கு மக்காச்சோளம் செயல்விளக்கத்திடல் அமைத்திட மானியம் வழங்கப்படவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ 35000 ஹெக்டேர் பரப்பில் மக்காச்சோளம் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (மக்காச்சோளம்) மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் (மக்காச்சோளம்) ஆகிய திட்டங்கள் மூலம் செயல்விளக்கத்திடல்கள் 1740 ஹெக்டேர் அமைப்பதற்கு ரூ.197.7 லட்சம் மற்றும் பொது விநியோகம் திட்டத்தின் கீழ் இடுபொருள்களை விநியோகம் செய்ய ரூ.124.282 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பெற்றுள்ளது.

மக்காச்சோள செயல்விளக்கத்திடல் அமைத்திட ஒரு ஹெக்டேருக்கு மக்காச்சோள விதை 15 கிலோ, நுண்ணூட்டக் கலவை 12.5 கிலோ, திரவ உயிர் உரம் 1 லிட்டர், பயிர் வளர்ச்சி ஊக்கி 15 கிலோ மற்றும் உயிரியல் பூச்சிக் கொல்லி 4 கிலோ உள்ளடங்கிய இடுபொருட்கள் அதிகபட்சம் ஹெக்டேருக்கு ரூ.11500 மானியத்தில் வழங்கப்படும். 1 நபர் அதிகபட்சம் 2 ஹெக்டர் வரை செயல்விளக்கத்திடல் அமைக்கலாம்.

பொதுவிநியோக திட்டத்தின் கீழ் மக்காச்சோள விதைகள் ஒரு ஹெக்டேருக்கு 15 கிலோ வீதம், கிலோவிற்கு 100 ரூபாய் மானியத்தில் 15 கிலோவிற்கு ரூ.1500 மானியம் வழங்கப்படுகிறது. மேலும், 50 சதவீத மானியத்தில் ஒரு ஹெக்டேருக்கு நுண்ணூட்டக் கலவை 12.5 கிலோ, திரவ உயிர் உரம் 1 லிட்டர் மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லி 4 கிலோ இடுபொருட்களும் வழங்கப்படும்.

மேற்படி, திட்டங்களுக்கான மக்காச்சோள விதைகள் மற்றும் இடுபொருட்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் நகல், சிட்டா நகல் மற்றும் தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தை அணுகி திட்டப்பலன்களை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், மக்காச்சோள சாகுபடியில் அதிக மகசூல் பெற பரிந்துரைக்கப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள், உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளைப் பின்பற்றுமாறும், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தரமான மக்காச்சோள விதைகள் மற்றும் இடுபொருட்களைப் பெற்று அனைத்து வட்டார விவசாயிகளும் பயனடையலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷரண்யா அறி I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News