25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விருதுநகர் மண்டலத்தில் 29 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மண்டலத்தில் 29 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 29 பேருந்துகளின் சேவையினை   மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்,  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் ஆகியோர் இன்று (16.07.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.

   தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகின்றது.
 விருதுநகர் மண்டலத்தில் 9 பணிமனைகளில் உள்ள மொத்தம் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை 449 மற்றும் வறையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 418 ஆகும். இக்கழகத்தில் உள்ள மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2449 ஆகும். இக்கழகம் சாதாரணப் பேருந்து, விரைவுப்பேருந்து மற்றும் குளிர்சாதனப் பேருந்துகளை இயக்கி வருகின்றது. மேலும் நாளொன்றுக்கு நிர்ணிக்கப்பட்ட இயக்க தூரம் 1.95 லட்சம் கி.மீட்டர் ஆகும். இதனால் மாத்திற்கு 60.45 .இலட்சம் கி.மீட்டர் இயக்கம் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 3.50 இலட்சம் பயணிகளும் மாதம் ஒன்றுக்கு 104.80 இலட்சம் பயணிகளும் பயன்படும் வகையில் வழித்தட சேவைகள் இப்போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது..

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 07.05.2021 அன்று மகளிருக்காக விடியல் பயணத்திட்டம் நகரப்பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்ட இயக்கப்பகுதிகளில் மகளிர் தினந்தோறும் சுமார் 1.35 இலட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இதன் மூலம் மாதம் ஒன்றிற்கு மகளிருக்கு சுமார் 1000 ரூபாய் வரை சேமிப்பு ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படுகிறது. 500 நபர்களுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராமங்களுக்கும் இக்கழகம் பேருந்து சேவையினை தொடர்ந்து செய்து வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் இயங்கி வரும் விருதுநகர் மண்டலத்திற்கு  போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களால் 04.03.2024 அன்று 10 புதிய பேருந்துகளும், படிப்படியாக 26 புதிய பேருந்துகளும் என மொத்தம் 36 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இன்று 16.07.2024 தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் விருதுநகர் மண்டலம் சார்பில் 25 புறநகர் பேருந்துகள், 4 நகர் பேருந்துகள் என மொத்தம் 29 புதிய பேருந்துகள் ரூ.12.18 கோடி மதிப்பீட்டில் இயக்கப்படுகிறது.

அருப்புக்கோட்டை கிளைக்கு 5 பேருந்துகளும், சிவகாசி கிளைக்கு  8 பேருந்துகளும், இராஜபாளையம் கிளைக்கு 9 பேருந்துகளும், விருதுநகர் கிளைக்கு 2  பேருந்துகளும், காரியாபட்டி கிளைக்கு 1 பேருந்தும், சாத்தூர் கிளைக்கு 2 பேருந்துகளும், திருவில்லிபுத்தூர் கிளைக்கு 2 பேருந்துகளும் என மொத்தம் விருதுநகர் மண்டலத்திற்கு  29  புதிய  பேருந்துகள் இன்று இயக்கி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு அரசு போக்குவரத்து கழகத்தை மாற்றியமைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.  பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை இருக்கும் போது, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நமது போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய விகிதம் சீரமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, நல்ல நிலையில் போக்குவரத்துக் கழகம்  இயங்குவதற்கு  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில், எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தான் காரணம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மாநில அரசிடம் இத்தனை பேருந்துகள் கிடையாது .நம்முடைய மாநில அரசிடம் தான் சுமார் 20,000 பேருந்துகள் இருக்கின்றன. எல்லா கிராமங்களுக்கும் பேருந்து வசதிகள் இருக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அதேபோல் நேரம் முறைப்படி இயங்குகின்ற பேருந்துகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது .இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகளைப் பெற்று இருக்க கூடிய போக்குவரத்து கழகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான  அரசு மென்மேலும் மேம்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News