முருங்கையிலை அடை
முக்கால் கப் துவரம்பருப்பு, அரை கப் பாசிப்பருப்பு, கால் கப் புழுங்கல் அரிசியைக் கழுவி, 2-3 மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும்.
பிறகு ஊறவைத்தவற்றுடன் 2 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.மாவைப் பெரிய பாத்திரத்தில்சேர்த்து இதனுடன் நறுக்கிய வெங்காயம், ஒரு கப் முருங்கையிலை, அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும் தவாவை சூடாக்கி, மாவைத் தோசை போல வார்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும். விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
0
Leave a Reply