திரு.K.K.தேசிங்குராஜா அவர்களின் துணைவியார் அமரர் K.D. ஸ்ரீரங்கம்மாள்அவர்களின் நினைவாக மகளிர் வாக்கத்தான் (நடைபயணம்)
யுகாதி திருநாளை முன்னிட்டு 07.04.2024 அன்று ராஜபாளையம் திருவனந்தபுரம் கோட்டையில் நடைபெற்ற முன்னாள் மகாசபை தலைவர்திரு.K.K.தேசிங்குராஜா
அவர்களின் துணைவியார் அமரர் K.D. ஸ்ரீரங்கம்மாள்அவர்களின் நினைவாக மகளிர் வாக்கத்தான் (நடைபயணம்) இராஜை நகரில் முதல் முறையாக மிக விமர்சையாக நடைபெற்றது. இப்போட்டியில் 306 மகளிர் பங்கேற்று ஐந்து மற்றும் மூன்று கிலோ மீட்டர் நடைபயணம் செய்தார்கள் இவ்விழாவை Dr.லஷ்மிநிவேதிதா மற்றும் Dr.A.B. சித்ரா அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.இந்த அற்புதமான நிகழ்வை K.D. சக்திவேல் ராஜா, சான்ஸ்ரீ லெதர்ஸின் உரிமையாளர், தனது தாயாரின் நினைவாக, தனது தந்தை சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன் இனிதே நடத்தினார்.
P.R.விஜய்குமார் அறக்கட்டளையின் அறங்காவலர் P.M.ராமராஜ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தொப்பிகளை வழங்கி ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.
இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த திருவனந்தபுரம் கோட்டை சத்ரிய ராஜுக்கள் மகாசபை தலைவர் திரு.S.A.ஜெகநாதராஜா, K.K.தேசிங்குராஜா, குடும்பத்தார்கள், மகாசபை உறுப்பினர்கள், மகளிர் அணி, இளைஞர்கள் அனைவருக்கும் K.D. சக்திவேல்ராஜா நன்றி கூறினார்..
0
Leave a Reply