தேசிய அறிவியல் தின விழா
இராஜபாளையம் ஆனந்த வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினவிழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளின் அறிவியல் கண்காட்சிகளுடன் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக திரு. ராஜேஷ்(சீனியர் எஞ்சினியர் ஆரக்கிள் கம்பெனி பிரைவேட் லிமிடெட்) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் போட்டி நிறைந்த இவ்வுலகில் மாணவர்களுக்கு படிப்புடன் கூடிய பிற திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் அதை வெளிப்படுத்த வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுப்பதையும், பாராட்டிப் பேசினார். பள்ளியில் செயல்படும் இலக்கிய மன்றங்கள் மூலமாக மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை மட்டுமல்லாமல் ஆங்கில மொழி பேசும் திறனையும் வளர்த்துக் கொள்ளவும், வேண்டும் என்றும். போட்டி நிறைந்த இவ்வுலகில் எவ்வாறு வெற்றி பெற்று சாதிக்க முடியும் என்பதையும் அழகாக எடுத்துக் கூறினார். மாணவர்கள் சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக இந்திய ஆட்சிப் பணியிலும்மருத்துவத் துறையிலும், தொழில்நுட்பத் துறையிலும் சிறந்து விளங்கி பேரும் புகழும் பெற்றுத் திகழ வேண்டும் எனவும் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. ஜெயபவானி கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்களுக்கும், தன் நகைச்சுவை கலந்த பேச்சின் மூலம் நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தார். பள்ளித் தாளாளர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க, ஆங்கில ஆசிரியை திருமதி நிவேதா நன்றி நவில விழா இனிதே நிறைவடைந்தது. மாணவர்கள் தங்கள் படைப்புகளை சொட்டு நீர் பாசனம், முப்பரிமாண படம், இன்குபேட்டர், பட்டன் கேமரா, மைக்ரோ ஆர்கனிசம் லேசர் ஒளி மூலமான கண்டுபிடிப்பு, சானிடைசர் போன்ற படைப்புகளின் மூலம் தங்களது திறமையை வெளிக்கொணர்ந்தனர். விழாவில் நிர்வாக அலுவலர் திரு வெங்கட பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
0
Leave a Reply