25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


ஆலிவ் ஆயில்  மசாஜ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆலிவ் ஆயில்  மசாஜ்

ஆலிவ் எண்ணெயில் காணப்படும் இய்ற்கையான கொழுப்புகள் முகம் மற்றும் சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசராக அமைகிறது. இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.ஆலிவ் எண்ணெய் கொண்டு சருமத்தில் இருக்கும் வடுக்கள் மற்றும் பருக்களின் தழும்புகள் மீது தவறாமல் மசாஜ் செய்வதன் மூலம் அழகான சருமத்தை பெறலாம்

முகம் புத்துணர்ச்சிப் பெற முதலில் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்,பின், உப்பு அல்லது சர்க்கரையை நீரில் கலந்து ஸ்கரப் செய்யுங்கள். அதன்பின், வீட்டில் இருக்கும் கடலை மாவு, பால் மற்றும் மஞ்சள் தூள் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். இதனை வாரம்2 அல்லது3 முறை செய்வதன் மூலம் உங்கள் சருமம் பொலிவடையும்

தோல் பகுதிகள் வெள்ளையாக மாற பவுலில் கஸ்தூரி மஞ்சள் தூள்2 அல்லது3 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் ஆலிவ் ஆயில்3 அல்லது4 ட்ராப்ஸ்கள் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். நன்றாக கலந்ததை தோல் பகுதியில் இரவு நேரத்தில் தடவி வரவேண்டும். இரவு முழுவதும் வைத்திருந்தால் தோலிற்கு நல்ல மாற்றம் தெரியும். தடவியதை காலையில் வாஷ் செய்து கொள்ளலாம்.

சிலருக்கு எப்போதும் உதடு வறண்ட நிலையிலே இருக்கும். இதற்கு பவுலில்1/2 ஸ்பூன் சுகர் ஸ்க்ரப் அதனுடன்2 அல்லது3 ட்ராப்ஸ் ஆலிவ் ஆயிலை மிக்ஸ் செய்து வறண்ட இடத்தில் தடவி வர வேண்டும். இந்த டிப்ஸை தொடர்ச்சியாக செய்யாமல் ஒரு நாள் விட்டு கூட செய்து வரலாம். வறண்ட பகுதி நல்ல மாற்றம் கிடைக்கும்.

சிலருக்கு உடலில் வரி தழும்புகள்(stretchmarks) இருக்கும். இது போன்ற வரி தழும்பு மறைய பயோ ஆயில்(BioOil) மற்றும் ஆலிவ் ஆயிலை மிக்ஸ் செய்து தடவி வந்தால் கண்டிப்பாக அந்த தழும்பு கோடுகள் மறைந்துவிடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News