25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


மூன்றாவது புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு நூறாண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைக் காட்சிப்படுத்தும் கலைக்காட்சி அரங்கம் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூன்றாவது புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு நூறாண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைக் காட்சிப்படுத்தும் கலைக்காட்சி அரங்கம் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத்திருவிழா, விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது.

 இப்புத்தகத் திருவிழாவின் மைய நோக்கம் "மரமும், மரபும்", அதாவது சுற்றுச்சூழலையும், நமது பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகும். இதனடிப்படையில் இப்புத்தகக் கண்காட்சியில், நூறாண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைக் காட்சிப்படுத்தும் கலைக்காட்சி அரங்கம் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விருதுநகர் மாவட்டத்தின் வரலாறு, வளர்ச்சி, பண்பாடு, பின்பற்றிய பழக்க வழக்கங்கள், நடைமுறைகள்,தொழில்கள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் உள்ள நூறாண்டுகளுக்கு முந்தைய, அரிய புகைப்படங்கள் மற்றும் பழமையான, அரிய ஆவணங்கள், ஆகியவை பொது மக்களிடம் இருந்து வரவேற்கப் படுகின்றன.

மேலும், பொதுமக்களால் வழங்கப்படும் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள்  காட்சிப் படுத்துவதற்காக உரிய முறையில் படியெடுக்கப்பட்டு மீண்டும் உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும். பழமையான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை, செப்டம்பர் 20-ம் தேதிக்குள், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வேலை நாள்களிலும் நேரில் வந்து கொடுக்கலாம். இது தொடர்பாக 73977-15688 -என்ற கைப்பேசி எண்ணில் மாவட்ட சுற்றுலா அலுவலரைத்  தொடர்பு கொள்ளலாம்.மேலும் காட்சிப்படுத்தப்படும் சிறந்த புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News