25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வீட்டு  மாடித் தோட்டத்தில்  வெங்காயம் பயிரிடும் முறை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீட்டு மாடித் தோட்டத்தில் வெங்காயம் பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம்.GrowBags அல்லதுThottiஅடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா,.விதை வெங்காயம் அல்லது விதைகள்,நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்.வெங்காயம் வளர்வதற்கு சற்று அகலமான தொட்டி அல்லது பை தேவைப்படும்.இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும்.10 நாட்களுக்கு பிறகு விதைக்க வேண்டும்.பைகளில் நிரப்பும் போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது. வீட்டு  மாடித் தோட்டத்தில்  வெங்காயம் பயிரிடும் முறை

விதை வெங்காயத்தை நேரடியாக ஊன்றலாம் . விதைகளை முதலில் குழிதட்டில் விதைத்து, பின் தொட்டிகளுக்கு மாற்ற வேண்டும்.இதன் இடைவெளியானது தேர்வு செய்யும் பைகளை பொறுத்து மாறுபடும். விதையை சிறிது ஆழத்தில் ஊன்ற வேண்டும். வெங்காய நாற்றுகளின் வேரில் மண் உதிர்ந்து போனாலும், வேர் கொஞ்சம் சேதாரம் ஆனாலும் எடுத்து நட்ட பிறகு எளிதாக வேர் பிடித்து வளர்ந்து விடும்.விதை வெங்காயத்தை ஊன்றிய உடன் பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும். நாற்றுகளாக இருந்தால் ஊன்றியவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். தினம் ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் ஊற்ற வேண்டும்.பஞ்சகாவ்யா உரத்தை மேல் தெளிப்பாக தெளிக்கலாம். இரண்டு லிட்டர் தண்ணீரில் ஒரு கையளவு சாணத்தை கரைத்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.இதில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அதிகம் இருக்காது. வேப்பம்புண்ணாக்கை ஊறவைத்து வடிகட்டிய நீருடன் வேப்ப எண்ணெய்3 மிலி(ஒரு லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் பூச்சிகள் காணப்பட்டால் கட்டுப்படுத்தப்படும்.

நாற்று மூலம் நட்டால், நான்கு மாதத்தில் விளைச்சல் எடுக்கலாம். வெங்காயத்தை நேரடியாக விதைக்கு போது இரண்டு-இரண்டரை மாதத்திலேயே விளைச்சல் எடுக்கலாம். செடியின் பச்சை நிறம் போய், லேசாய் பழுப்பாக ஆரம்பிக்கும் போது அறுவடை செய்யலாம். வெங்காயம் செடியின் மேல்பரப்பிலேயே தெரியும். அதையும் கொஞ்சம் கவனித்து, நல்ல திரட்சியாக தெரியும் போது அறுவடை செய்ய வேண்டும். ஒரே தடவையில் மொத்தமாய் அறுவடை செய்ய வேண்டியதில்லை. நல்ல திரட்சியான வெங்காயத்தை மட்டும் அறுவடை செய்துவிட்டு மற்ற செடிகளுக்கு நீர் ஊற்றி வந்து இரண்டு வாரம் கழித்து மிச்ச செடிகளை அறுவடை செய்யலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News