பசியை அதிகரிக்க செய்யும் வெங்காயத்தாள்
ஸ்ப்ரிங் ஆனியன் என்ற பெயரில் பரவலாக அறியப்படும் வெங்காயத்தாள் உணவுக்கு சுவையூட்டுவதாக மட்டுமல்லாமல் பல்வேறு ஊட்டச்சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. பல உடல் பிரச்னைகளை தீர்க்கும் மருத்துவ குணம் இதில் உள்ளது.சைனீஸ் உணவுகள் சாப்பிடும்பழக்கம்மக்களிடையேஅதிகரித்துவிட்டநிலையில்தான்வெங்காயத்தாளின்அருமைமக்களுக்குப்புரியத்தொடங்கிவிட்டது.வெங்காயத்தாளில் விட்டமின் சி. விட்டமின்72 விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள், காப்பர். பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம் மாங்கனிஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. வெங்காயத்தில் உள்ளதை போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது.வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது.வெங்காயத் தாளில் உள்ள புரோப்பைல் டை சல்பேட் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
வெங்காயத் தாளை அரைத்து, அதில் வெந்தயத்தை ஊறவைத்து உல ர்த்திப் பொடி செய்து, தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் உடல் சூடு குறையும் . இது உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து, இதய ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது. ரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் உதவுகிறதுவெங்காயத்தாளில் உள்ள சல்பர் சேர்மங்கள் ரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டால் இதயக் கோளாறுகள், பக்கவாதம் போன்ற உயிருக்கு உலை வைக்கும் ஆபத்தான நோய்களில் இருந்து தப்பலாம்.வெங்காயத் தாளில் உள்ள குரோமியம் சத்தானது நீரிழிவு நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. உடலில் சர்க்கரை சத்து ரத்தத்தில் உடனடியாக அதிகரிப்பதை இது தடுக்கிறது.சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக வெங்காயத் தாளை தங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லதாகும்
0
Leave a Reply