25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இதய நோய்க்கு  ஆரஞ்சு தோல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இதய நோய்க்கு ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு பழங்களைச் சாப்பிட்டுவிட்டுத் தோலைக் குப்பையில் போட்டுவிடுகிறோம்.ஒருசிலர் அதில் குழம்புசெய்வது, காயவைத்துப் பொடி செய்து, தோல் மீது பூசுவது என்று பயன் படுத்துவர். ஆனால், உலகம் முழுதும் பெரும் பாலும் இந்தத் தோல், கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது அல்லது வீணாக்கப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்கா வின் ப்ளோரிடா பல்கலை மேற்கொண்ட ஆய் வில், ஆரஞ்சுத் தோலில் இருந்து இதய நோய்க்கான மருந்தை எடுக்க முடி யும் எனக் கண்டறியப் பட்டுள்ளது.நம் குடலில் வாழும் சில பாக்டீரியா, நாம் உண்ணும் உணவைச் செரிக்க உதவும் போது, டிரைமெதிலமைன் என் ஆக்சைட் (Trimethylamine N oxide - TMAO) வேதிப் பொருளை உரு வாக்குகிறது. இது இதய நோய்க்குக் காரணமாகிறது. நம் உடலில் இந்த வேதிப் பொருளின் அளவைக் கொண்டு இதய நோய் வரப்போவதை முன்கூட் டியே கண்டறிய முடியும்.

ஆரஞ்சு தோலில் உள்ள பெருலோ யில்புட்ரெஸ்சைன்( Feruloyputrescine ) எனும் ஒரு கலவை டிரைமெதி லமைன் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது என்ப தைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.ஆய்வுகளை மேம் படுத்தி, ஆரஞ்சு தோலில் இருந்து பெருலோயில்புட் ரெஸ்சைனை எளிதாகப் பிரித்தெடுப்பதன் வாயிலாக இதய நோய்க்கான புதிய மருந்தை உருவாக்க முடியும் என்பதுவிஞ்ஞானிகளின் கருத்து.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News