பப்பாளி காய் பொரியல்
தேவையான பொருட்கள்:
பச்சை பப்பாளி (Raw Papaya) - 1 (சிறியது)
தேங்காய் துருவல் - 2-3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பப்பாளி காயின் தோலை சீவி, விதைகளை நீக்கிவிட்டு, துருவிக்கொள்ளவும் அல்லது பொடியாகநறுக்கிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய்தாளிக்கவும்.
துருவிய பப்பாளி, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். சிறிதளவு தண்ணீர்தெளித்து, மூடி வைத்து 5-7 நிமிடம் மிதமான தீயல் வேகவைக்கவும்.
பப்பாளி வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இது சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு சிறந்த துணை உணவாகும்.
0
Leave a Reply