வன்கொடுமையால் பாதிக்கப்பபட்டு இறந்த நபரின் வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணி நியமன ஆணை
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.09.2024) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் வழங்கினார்.
அதன்படி, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த சிவகாசி வட்டம் விஸ்வநத்தத்தை சேர்ந்த லேட் திரு.செல்வராஜ் என்பவரின் தாயார் திருமதி வேல்த்தாய் மற்றும் மனைவி திருமதி முனீஸ்வரி என்பவருக்கும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் அரசு வழங்கும் நிவாரணத் தொகை ரூ.3,00,000/- (மூன்று இலட்சம் மட்டும்) முதல் தவணையாகவும், பின்பு இரண்டாம் தவணையாக ரூ.3,00,000/ (மூன்று இலட்சம் மட்டும்) இருவரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டது.
மேலும், திருத்தப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2016-ன் கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட லேட் திரு.செல்வராஜ் என்பவரின் தாயார் திருமதி வேல்த்தாய் என்பவருக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) பெறுவதற்கான ஆணையினையும் மற்றும் அவரது மனைவிக்கு ஆதிதிராவிட நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில், கருணை அடிப்படையிலான சமையலர் பணிக்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ரமேஷ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
0
Leave a Reply