விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (10.06.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
முன்னதாக, விருதுநகர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.96,011/- வீதம் ரூ.13,44,154/- மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்களையும், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.1,13,400/- வீதம் ரூ.3,40,200/- மின்கலம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர நாற்காலிகளையும், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.6,800/- வீதம் ரூ.68,400/- மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு ரூ.17,52,754/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரம்மநாயகம், உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply