போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் நடைபெற்ற போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் (12.08.2024) மாணவ, மாணவியர்கள் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
அதன்படி, இந்நிகழ்ச்சியில் போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்;விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார கூறுகின்றேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாணவ, மாணவியர்கள் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
அரசு மருத்துவமனையிலும் போதை மீட்பு மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ளது. இந்த மையங்களில் போதைக்கு அடிமையானவர்களை 2 வாரங்களில் சரி செய்துவிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்இக்கூட்டத்தில், உதவி ஆணையர் (கலால்) திரு.கணேசன், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply