மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிவகாசி வட்டம் நாராணாபுரம் ஊராட்சியில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களைத் தேடிச் சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண மக்கள் தொடர்பு திட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் 2 ஆவது புதன் கிழமை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 09.09.2026 அன்று நடைபெற இருந்த முகாம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, விருதுநகர் மாவட்டம், "சிவகாசி வட்டம் நாரணாபுரம் கிராமத்தில்" அமைந்துள்ள "லலிதா மஹாலில்" வைத்து 22.09.2026 தேதியன்று காலை 11.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்து துறையினை சேர்ந்த அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.மேற்படி, முகாமில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே "சிவகாசி வட்டம் நாரணாபுரம் கிராமத்தில்" உள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக நேரில் அளித்து குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளவும் அரசின் திட்டங்களை முழுமையாக பெற்று பயனடையவும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply