தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களுக்கான தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களுக்கு விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட கே.வி.எஸ்.பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (19.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் 10 மையங்களில் நடைபெற்றது.இத்தேர்வு மையங்களில் மொத்தம் 2,709 தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 1,492 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினர். 1,217 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.
அதன்படி, விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரியில் அமைக்கப்பட்ட 3 தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ட 769 தேர்வர்களில் 436 தேர்வர்கள் வருகை புரிந்து, 333 பேர் வருகை புரியவில்லை. க்ஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் அனுமதிக்கப்பட்ட 300 தேர்வர்களில் 163 தேர்வர்கள் வருகை புரிந்து, 137 பேர் வருகை புரியவில்லை. ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரி மையத்தில் அனுமதிக்கப்பட்ட 300 தேர்வர்களில் 170 தேர்வர்கள் வருகை புரிந்து, 130 பேர் வருகை புரியவில்லை. விருதுநகர் எஸ்.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்ட 2 தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ட 560 தேர்வர்களில் 303 தேர்வர்கள் வருகை புரிந்து, 257 பேர் வருகை புரியவில்லை. விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட 3 தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ட 780 தேர்வர்களில் 420 தேர்வர்கள் வருகை புரிந்து, 360 பேர் வருகை புரியவில்லை.
தேர்வு மையங்களில் தேர்வர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply