இருளில் மூழ்கிய கியூபா!
மின்பகிர்மானக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கியூபா முழுவதும் நாடு தழுவிய மின்தடை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் கியூபா சந்திக்கும் 7-வது நாடு தழுவிய மின்தடை இது என கூறப்படுகிறது. சில மாகாணங்களில் 60 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக குடிநீர் விநியோகம், தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடி மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்கனவே சிரமங்களை எதிர்கொண்டுவரும் கியூபா, எரிபொருள் மற்றும் உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதிலும் சிக்கல்களை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply