யூத் ஒலிம்பிக் பீச் மல்யுத்தம்: பதக்கம் வென்று வரலாறு படைத்தார் இந்தியாவின் தானியா.
செனகலில் நடைபெற்று வரும் 4வது யூத் ஒலிம்பிக் தொடரில், 205 நாடுகளைச் சேர்ந்த 2,654 இளம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா சார்பில் 17 வீரர்கள் (6 ஆண்கள், 11 பெண்கள்) 11 விளையாட்டுகளில் களமிறங்கியுள்ளனர்.
பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவு பீச் மல்யுத்த இறுதிப்போட்டியில், இந்தியாவின் தானியா, சீனாவின் மின் ஜாவோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 1-2 என்ற கணக்கில் போராடித் தோல்வியடைந்த தானியா, வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் யூத் ஒலிம்பிக் பீச் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
இது இத்தொடரில் இந்தியாவுக்குக் கிடைத்த 7வது பதக்கமாகும் (3 வெள்ளி, 4 வெண்கலம்). முன்னதாக ஜூடோ, பேட்மிண்டனில் தலா ஒரு வெள்ளியும், நீச்சலில் 3 மற்றும் உஷு போட்டியில் ஒரு வெண்கலமும் இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply