மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி
விருதுநகர் மாவட்டம், தேசப்பந்து மைதானத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மழைநீர் சேரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் (09.08.2024) துவக்கி வைத்தார்.பின்னர், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலமாக மழைநீர் சேகரிப்பு தொடர்பான குறும்படங்கள்/குறும்பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி, வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆண்டுதோறும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரை வீணாக்காமல் சேமித்து வைப்பதாகும். மேலும், மழைநீரை சேமிப்பதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, வீடுகள் , நிறுவனம், கடைகள் , பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கட்டிடங்களில் வரும் மழைநீரை சேகரிப்பதால், கோடைகாலங்களில் வரும் தண்ணீர் பிரச்சினையை தவிர்க்க முடியும்.மேலும், திறந்தவெளிக் கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் இருந்து கொண்டுவரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம், வடிகட்டும் தொட்டிக்குள் பாய்ச்சுவதால், சிறு தொட்டிக்குள் மழைநீரைச் செலுத்தி சேகரிக்கவும், கிராமப்புறங்களில் கிணறுகள் மூலமும், தூர்வாரப்பட்ட குளங்கள் மூலமும் மழைநீர் சேகரிக்க முடிகிறது. நம் மக்களிடையே பல்வேறு வகையான நோய்கள் அதாவது, காலரா, காய்ச்சல் , வயிற்றுபோக்கு, வயிற்றுவலி, இருமல், வாந்தி போன்ற நோய்கள் நீரின் மூலம் பரவுகின்றன.
அதனை தடுப்பதற்கு, குடிக்கும் நீரை காய்ச்சி குடிக்க வேண்டும். திறந்த வெளியில் இருக்கும் நீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலி பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், மழைநீர் சேகரிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் திரு.த.கென்னடி மற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர்கள், இளநிலை நீர் பகுப்பாய்வாளர், பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply