சாந்தனு நாயுடுக்கு அள்ளிக்கொடுத்த ரத்தன் டாடா.
இந்தியாவே ரத்தன் டாடா மறைவின் போது கலங்கி நின்றது யாராலும் மறக்க முடியாது. இவருடைய மறைவிற்கு பின்பு டாடா ட்ரஸ்ட் தலைவர் பதவியை நோயல் டாடாவுக்கு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ரத்தன் டாடா-வின் உயில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.ரத்தன் டாடாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு என பார்த்தால் 10000 கோடி ரூபாய் மதிப்புடையது. அவரது தாராள குணம் அவருடைய உயிலில் தெரிகிறது. அவரது மறைவுக்குப் பிறகு, அவருடைய நம்பகமான சமையல்காரர் ராஜன் ஷாவுக்கு தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயான டிட்டோ-வை பராமரிக்க ஒப்படைத்துள்ளார்.
இதன் மூலம் ராஜன் ஷா, டிட்டோ வளர்ப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தனது சொத்து மதிப்பில் இருந்து செலவு செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். இதேபோல் ரத்தன் டாடா தனது நீண்டகால பணியாளரான பட்லர் சுப்பையாவுக்கும் தனது உயிலில் சில ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இப்படி பலருக்கும் பலவற்றை எழுதி வைத்த ரத்தன் டாடா தனது இளம் நண்பராகவும், நீண்ட காலம் அவருடன் பயணிக்கும் முக்கியமான நபராகவும் இருக்கும் சாந்தனு நாயுடு-வை எப்படி ரத்தன் டாடா மறப்பார். அவருடைய 10000 கோடி ரூபாய் சொத்தில் சில முக்கியமான விஷயத்தை சாந்தனு நாயுடு-வுக்காக கொடுத்துள்ளார். சாந்தனு நாயுடு துவங்கிய முதியோர்களுக்கான நல சேவை நிறுவனமான குட்ஃபெல்லோஸில் (Goodfellows) தனது முதலீட்டின் மூலம் பெற்ற பங்கை ரத்தன் டாடா திரும்பவும் நிறுவனத்திற்கே கொடுத்துள்ளார்.
சாந்தனு நாயுடுவின் வெளிநாட்டுக் கல்வி செலவுகளாக டாடா குழுமத்தில் பெற்ற கடனை தனது சொத்து மதிப்பில் இருந்து கழிக்கவும், முழு செலவுகளையும் தானே ஏற்றிருக்கிறார் ரத்தன் டாடா. இது இருவரின் ஆழமான நட்பை பெருமைப்படுத்து விதமாக உள்ளது. சாந்தனு நாயுடு மற்றும் ரத்தன் டாடாவையும் இணைத்து இருவருக்குமான விலங்குகள் மீதான அன்பு தான். மும்பை சாலையில் பல தெரு நாய்கள் இரவில் வாகனங்களில் அடிப்பட்டு இறப்பதை தடுக்க சாந்தனு நாயுடு இரவில் வெளிச்சம் பட்டால் மின்னும் நாய் காலரை உருவாக்கினார். அப்போது சாந்தனு நாயுடு டாடா குழுமத்தில் தான் பணியாற்றினார், இந்த டாக் காலர் முயற்சி பாராட்ட சாந்தனு நாயுடு-வை அழைத்த போது தான் இருவரும் விலங்குகள் மீதான அன்பு குறித்து பரிமாறிக்கொண்டு அவர்களது நட்புக்கு ஆரம்பமாக இருந்தது.
0
Leave a Reply