சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மூலம், சத்துணவுப் பணியாளர்களுக்கான ஊட்டசத்து சுவை மற்றும் உணவின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பான புத்தாக்க பயிற்சி
விருதுநகர் மாவட்டம், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில்(12.09.2024) சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மூலம், சத்துணவுப் பணியாளர்களுக்கான ஊட்டசத்து சுவை மற்றும் உணவின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பான புத்தாக்க பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.
சத்துணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவு என்பது, பள்ளிக் குழந்தைகளுக்கு பசியை போக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஊட்டசத்து மிக்க உணவை சுவையாக வழங்குவதே நோக்கமாகும்.அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், மதிய உணவுத்திட்டம் குறித்து பல்வேறு அரசு பள்ளிகளில் களஆய்வு மேற்கொண்டதில், பல பள்ளிகள் தரமான, சுவையான உணவுகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.சமைக்கக்கூடிய உணவை பொறுமையாக பக்குவத்துடன், நம் வீட்டில் எவ்வாறு உணவு சமைக்கின்றோமோ, அவ்வாறு சமைத்தாலே போதுமானது. சத்துணவுத்திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு, ருசியான தரமான உணவை கொடுத்தால் ஊட்டச்சத்து குறைபாட்டால் வரும் இரத்தசோகை குறைபாட்டிற்கு தீர்வு காண முடியும். பள்ளிகளில் நல்ல தரமான உணவை சமைத்தால் குழந்தைகள் உண்ணும் அளவை, அதிகப்படுத்தி கொள்வார்கள். அதனால் அவர்கள் ஊட்டசத்து பெற்று, குழந்தைகளின் உடல் வளர்ச்சி மிக நன்றாக இருக்கும்
எனவே, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்பதை நினைவூட்டுவதற்காக தான் இந்த பயிற்சி முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம். குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டு எனவும், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) திரு.ஜெகதீசன், அரசு அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply