25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், கலையரங்க உரிமையாளர்கள், உணவகம் தங்கும் விடுதி உரிமையாளர்கள், பணம் கடன் கொடுப்பவர்கள் மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்களுடனான தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S., அவர்கள்  தலைமையில்  (16.03.2026) நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதி 23.04.2026 அன்று நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் 15.03.2026 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அச்சக உரிமையாளர்கள்மக்கள் பிரிநிதித்துவ சட்டம் பிரிவு 127 ஏன் கீழ் தேர்தல் காலங்களில் அச்சக உரிமையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தேர்தல் சமயங்களில் அடிக்கப்படும் அனைத்து போஸ்டர் துண்டு பிரசுரம், பேனர் போன்றவை எவையாயினும் அது எந்த அச்சகத்தால் அடிக்கப்பட்டது என்ற விபரம் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அச்சடிக்கப்பட உள்ள போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவற்றின் வாசகங்கள் எவையும் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவோ அல்லது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலோ அமையக் கூடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு அச்சடிக்கப்படும் நோட்டிஸ், பேனர் நகல் ஒன்றுடன் ஒரு உறுதி மொழி படிவத்துடன் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அறிக்கை அனுப்பி வைத்திட வேண்டும்.அவ்வாறு அச்சடிக்கப்படும் நோட்டிஸ், பேனர் ஆகியன நகல் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டாலும் அதுவும் சம்பந்தப்பட்ட அச்சகத்தின் பிரசுரமாகவே கருதப்படும்.அச்சடிக்கப்பட உள்ள போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவற்றின் சரியான எண்ணிக்கையை குறிப்பிட்டு பற்றுச் சீட்டு வழங்கப்பட வேண்டும். மேற்படி எண்ணிக்கையினை கூட்டியோ அல்லது குறைத்தோ காட்டக் கூடாதுமக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 127 மீறி செயல்படும் எந்த ஒரு அச்சு உரிமையாளர் மீதும் ஆறு மாதம் மற்றும் இரண்டாயிரம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் அச்சக உரிமையும் ரத்து செய்யப்படும்.

திருமண மண்டபங்கள்தேர்தல் காலங்களில் முன்பதிவு செய்யப்படும் நிகழ்ச்சிகள் அரசியல் சார்பானவை மற்றும் சார்பற்றவை என பிரித்துக்கொள்ள வேண்டும். அரசியல் சார்பான நிகழ்ச்சிகள் எனில் காவல்துறை மற்றும் பிற அனுமதிகள் முறையாக பெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.நிகழ்ச்சி நடத்துவதற்கு பெறப்படும் உண்மையான கட்டண தொகை தெரிவிக்கப்பட வேண்டும். கூட்டியோ அல்லது குறைத்தோ தெரிவிக்க கூடாது.அரசியல் நிகழ்ச்சிகளில் பணமோ அல்லது பரிசு பொருட்களோ விநியோகம் செய்வதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறான நிகழ்வுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கும். காவல்துறையினருக்கும் தெரிவித்திடல் வேண்டும்.

 தனியார் நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு பணமோ, பரிசு பொருட்களோ போன்றவை இலவசமாக விநியோக்கப்பட்ட வாய்ப்புள்ளது. அவ்வாறான இனங்கள் எதுவும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட வேண்டும்.திருமண மண்டபங்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் மொத்தமாக சாப்பாடு, பிரியாணி போன்றவை தயாரிக்க அனுமதிக்க கூடாது. திருமண மண்டபங்களை வாக்காளர்களை கவரும் விதத்தில் பரிசு பொருட்களை சேரித்து வைக்கும் குடோனாக பயன்படுத்திட அனுமதி இல்லை.தங்கும் விடுதிகள்தங்கும் விடுதிகளில் நாளது தேதியிலிருந்து தேர்தல் முடியும் வரை செய்யப்பட்டுள்ள முன்பதிவு விபரங்களை அறிக்கையாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

வாக்குபதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் வெளியூர் நபர்களை மொத்தமாக தங்க அனுமதிக்க கூடாது. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணமோ அல்லது பரிசு பொருட்களையோ பதுக்கும் விதத்தில் செயல்படுவோரை கண்டறிந்து உடனடியாக தகவல் தெரிவித்திடல் வேண்டும்.மேற்கண்ட நிபந்தனைளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.வட்டிக்கு விடுவோர் மற்றும் நகை அடகு பிடிப்போர்எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் நகை அல்லது பத்திரத்தின் பேரில் கணிசமான ரொக்க தொகையினை வழங்கிடுவதற்கு முன்னர் அவர் அரசியல் அல்லது வேட்பாளர் தொடர்புடையவரா என அறிந்து கொள்ள வேண்டும்.

வாக்காளர்களை கவரும் விதத்தில் டோக்கன் விநியோகத்தின் மீது பணமோ அல்லது பொருளோ கொடுத்திடக் கூடாது. வாக்காளர்களை கவரும் விதத்தில் ஏற்கனவே அடகு வைக்கப்பட்ட நகைகளை இலவசமாக திருப்பி தருவதோ அல்லது சிறிய நகைகளுக்கு அதிக அளவு பணம் தருவதோ கூடாது.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைளும் வெளிப்படை தன்மையுடனும் உரிய விதிமுறைகளின் படியும் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு இனங்களும் அதற்குரிய பதிவேட்டில் சரியாக பராமரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.மேற்கண்ட நிபந்தனைகளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அச்சகங்கள், நகை அடகு பிடிப்போர் மற்றும் திருமணம், தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரம்/தொழில் செய்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், வங்கி அனைத்து திருமண மண்டபங்கள், அச்சக, தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் மற்றும் நகை அடகுதொழில் புரிவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News