சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு மறுவாழ்வு நடவடிக்கை
அருப்புக்கோட்டை ஒன்றியம், பெரியகட்டங்குடி, காலனி தெருவில் வசித்து வந்த திரு.தங்கராஜ் - திருமதி.மீனாட்சி தம்பதியருக்கு 12.09.2016 அன்று மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்பச்சிளம் பெண் குழந்தையை 10 நாட்கள் மட்டுமே வளர்த்த நிலையில், அருப்புக்கோட்டை வட்டம், பெரியகட்டங்குடி பகுதியில் வசித்து வந்த தம்பதியர் வசம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டனர் என அறியப்பட்டது.
இப்பெண் குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுவின் ஆணைப்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்து வருகிறார். இச்சிறுமி மீது உரிமை கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் என எவரும் இதுநாள்வரை வரவில்லை என அறியப்பட்டது.இச்சிறுமியின் பெற்றோர் குறித்த விபரங்கள் அறிய மேற்கண்ட கிராமத்தில் நேரடியாக களவிசாரணை செய்தபோது எவருமில்லை என அறியப்பட்டது.
இச்சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு மறுவாழ்வு நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் இச்சிறுமியின் பெற்றோர் அல்லது உறவினர்கள் இச்சிறுமியின்மீது உரிமைகோரி 26.09.2024-க்குள் “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5, வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் - 626003, தொலைபேசி எண். 04562 -293946“ என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
அவ்வாறு எவரும் வரவில்லை எனில் இச்சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு மாற்றுப்பராமரிப்பு திட்டத்தின்கீழ் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,. I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply