25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம், வருவாய்த் தீர்வாய அலுவலர் ,மாவட்ட ஆட்சியர்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம், வருவாய்த் தீர்வாய அலுவலர் ,மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் இன்று (12.06.2026) வருவாய்த் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ம் ஆண்டு ஜூன் 12 தொடங்கி, ஜூன்16 முதல் ஜூன் 19 வரை மற்றும் ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

அதன்படி, சாத்தூர் வட்டத்தில், ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையிலும், சிவகாசியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையிலும், திருவில்லிபுத்தூரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் சார் ஆட்சியர், சிவகாசி அவர்கள் தலைமையிலும்,  விருதுநகரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் வருவாய் கோட்டாட்சியர், சாத்தூர் அவர்கள் தலைமையிலும்,

காரியாபட்டியில்       ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 6 நாட்கள் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும்,அருப்புக்கோட்டையில்       ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் உதவி ஆணையர் (கலால்), விருதுநகர் அவர்கள் தலைமையிலும், இராஜபாளையத்தில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், விருதுநகர்     அவர்கள் தலைமையிலும்,

வெம்பக்கோட்டையில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி), விருதுநகர் அவர்கள் தலைமையிலும்,திருச்சுழியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 8 நாட்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும்,வத்திராயிருப்பில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளன

தன்படி, முதல் நாளான இன்றைய தினம், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல் (முழுப்புலம்) தொடர்பாக 4 மனுக்களும், அத்துமால் அளத்தல் தொடர்பாக 3 மனுக்களும், பட்டா மேல்முறையீடு தொடர்பாக 36 மனுக்களும், கணினி திருத்தம் தொடர்பாக 4 மனுக்களும், வீட்டுமனை பட்டா தொடர்பாக 11 மனுக்களும், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக 3 மனுக்களும், நில ஒப்படை தொடர்பாக 1 மனுவும்,கணினி சிட்டா/புட்டா நகல் புலப்பட நகல் தொடர்பாக 2 மனுக்களும், நத்தம் சிட்டா/புட்டா நகல் தொடர்பாக 3 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பாக 1 மனுவும், சான்றுகள் தொடர்பாக 3 மனுக்களும், 6 இதர மனுக்களும், பிற துறைகள் சார்பாக 3 மனுக்களும் என மொத்தம் 80 மனுக்கள் பெறப்பட்டன.

 பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் உரிய காலக்கெடுவிற்குள் விரைந்து முடிக்குமாறு வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, சாத்தூர் வட்டம், பெத்துரெட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு கணினி இணைய வழி பட்டாக்களையும், மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.38 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகைக்கான ஆணைகளையும் வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் வட்டாட்சியர், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News