விருதுநகர் மண்டலம் சார்பில் திருவில்லிபுத்தூர் கிளையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விபத்தில்லா ஓட்டுநர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகம்(மதுரை கோட்டம்) விருதுநகர் மண்டலம் சார்பில் திருவில்லிபுத்தூர் கிளையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விபத்தில்லா ஓட்டுநர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா (11.03.2026) மேலாண்மை இயக்குனர் திரு.வி.சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சாலை விதிகள், தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் போக்குவரத்து வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு விழா நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இவ்வாண்டு நமது மதுரை கோட்டத்தில் உள்ள மூன்று மண்டலங்களில் மதுரை மற்றும் திண்டுக்கல் மண்டலத்தில் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் மூன்றாவது விழாவாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா விருதுநகர் மண்டலத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான பாதுகாப்பான பேருந்து சேவைகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து செயல்படுத்தியுள்ளார்கள்.குறிப்பாக மகளிர்களுக்கான விடியல் பயணத்திட்டத்தின் வாயிலாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
அதுபோல மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவ மாணவியர்கள், திருநங்கைகள் உட்பட எண்ணற்றவர்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.பொதுமக்களுக்காக சேவையாற்றி வருகிற ஓட்டுநர்கள் சாலைவிதிகளை கண்டிப்பாக கடைபிடித்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணத்தினை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுகொண்டார்.பின்னர் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் பாதுகாப்பாக பேருந்தைகளை இயக்கிய 50 ஓட்டுநர்களுக்கும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்திய 27 ஓட்டுநர்களுக்கும், சிறந்த தொழில்நுட்ப பணியாளர்கள், சிறந்த பொறியாளர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இவ்விழாவில் மண்டல பொது மேலாளர் திரு.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். உதவிமேலாளர் (தொழில் நுட்பம் ) திரு.சத்தியமூர்த்தி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
0
Leave a Reply