25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சேமியா பொங்கல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சேமியா பொங்கல்

தேவையானவை: சேமியா - 2 கப், பாசிப்பருப்பு - அரை கப். பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கு, கறிவேப்பிலை சிறிது. நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: மிளகு ஒரு டீஸ்பூன். சீரகம் ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன். நெய் ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: ஒரு டீஸ்பூன் நெய்யில் சேமியாவை சிறிது வறுத்தெடுங்கள். பருப்பை தண்ணீர் சேர்த்து குழைய வேகவையுங்கள். வெந்தவுடன் அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கும்போது உப்பு. ஒரு டீஸ்பூன் நெய் ஆகியவை சேர்த்து பெரிய தீயில் 2 நிமிடம் வேசுவிட்டு, தீயை குறைத்து நன்கு வேகவிடுங்கள். அதில் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள். எண்ணெய். நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து. ஒரு நிமிடம் வதக்கி பொங்கலில் சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News