செப்டம்பர் 2024 பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்
இந்தஆண்டு செப்டம்பர் மாதம் "பௌர்ணமியானது செப்டம்பர் 17ம் தேதி வருகிறது. செப்டம்பர் 17ம் தேதி காலை 11.22 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 18ம் தேதி காலை 09.10 மணி வரை பௌர்ணமி திதி உள்ளது. செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்கிழமை, இந்த ஆண்டு புரட்டாசி மாத பிறப்பாகவும் அமைந்துள்ளதால் கூடுதல் சிறப்புடையாக அமைந்துள்ளது. பௌர்ணமி என்பதால் சிவனையும், சத்ய நாராயணரையும், புரட்டாசி முதல் நாள் என்பதால் பெருமாளையும், செவ்வாய் கிழமை என்பதால் முருகப் பெருமானையும் இந்த நாளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். பொதுவாக மாதப் பிறப்பு மற்றும் பௌர்ணமியில் கிரிவலம் செல்வதால் மற்ற நாட்களில் கிரிவலம் செல்வதை விட அதிக பலன் கிடைக்கும் என்பார்கள். இந்த ஆண்டு இரண்டும் இணைந்து வருவதால் இந்த நாளில் கிரிவலம் செல்வது இரட்டிப்பு பலனை தரும்.
நினைத்தாலே முக்தியை தரக் கூடிய திருத்தலம் திருவண்ணாமலை, உலகின் பல மூலைகளில் இருக்கும் சித்த புருஷர்களையும், ஞானிகளையும் தன்னை நோக்கி ஈர்க்கும் ஆன்மிக தலம் திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் இந்த தலம் பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும், ஆன்மிக சிறப்புகளையும் தன்னுக்குள் அடக்கி வைத்துள்ளது. இங்கு சிவனே மலையாக வீற்றிருப்பதால் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பான வழிபாடாகும். அருணகிரி நாதர் முதல் ரமண மகரிஷி வரை ஆயிரக்கணக்கான ஆன்மிக சான்றோர்களை போற்றி கொண்டாடும் திருத்தலம் திருவண்ணாமலையாகும்.
0
Leave a Reply