வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க எளிய குறிப்புகள் .
சுத்தமான வீடுதான் ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம்! உங்கள் வீட்டை எளிதாகப் பராமரிக்க சில எளிய வழிமுறைகள்:
- கண்ணாடியில் பனி/ஆவி படர்வதைத் தடுக்க:
சிறிதளவு ஷேவிங் கிரீமை (Shaving Cream) கண்ணாடியில் தடவி, மெல்லிய துணியால் துடைத்தால் கண்ணாடி தெளிவாகும்.
- துருப்பிடித்த கறைகளை நீக்க:
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து துருப்பிடித்த கறைகள் உள்ள இடத்தில் தேய்த்தால், கறைகள் எளிதில் நீங்கும்.
- கார்ப்பெட்டில் துர்நாற்றம் மற்றும் புத்துணர்ச்சி பெற:
கார்ப்பெட் மீது சிறிது சமையல் சோடாவை (Baking Soda) தூவி, 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு வேக்யூம் கிளீனர் (Vacuum Cleaner) கொண்டு சுத்தம் செய்தால், கார்ப்பெட் துர்நாற்றம் நீங்கி, சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
- பொலிவிழந்த வெள்ளிப் பாத்திரங்களைப் பளபளக்க:
வினிகர் மற்றும் சிறிதளவு சமையல் சோடா கலந்த வெதுவெதுப்பான நீரில் வெள்ளிப் பாத்திரங்களைச் சிறிது நேரம் ஊறவைத்து, பிறகு கழுவினால் பழைய பளபளப்பு மீண்டும் கிடைக்கும்.
"சுத்தமான வீடு... ஆரோக்கியமான வாழ்வு!"
0
Leave a Reply