25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  அவர்கள் 109 சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் 109 சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 109 சுகாதார செவிலியர்களுக்கு (14.11.2026) பணி நியமன ஆணைகளை வழங்கி, பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு தரமான மருத்துவச் சேவைகள் அனைத்து பகுதிகளிலும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களையும் தொடர்ந்து நியமனம் செய்து வருகிறது.குறிப்பாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை சுகாதாரச் சேவைகள் எளிதில் கிடைப்பதிலும், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதிலும் சுகாதார செவிலியர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

செவிலியர்கள் ஆகிய உங்களுக்கு இந்த பணி ஆணையினை வழங்குவது என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். மருத்துவத்துறை என்பது கடவுளுக்கு நிகராணத்துறை ஆகும். அத்தகைய துறையில் செவிலியர்களின் பங்கு இன்றியமையாததாகும். சிகிச்சைக்கு வருபவர்கள் மருத்துவர்களை முழுவதுமாக நம்பி தங்களது உடல்களை பரிசோதிக்க அனுமதிக்கின்றனர். அவ்வாறு நம்பி வரும் மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்க வேண்டியது நமது கடமை மற்றும் பொறுப்பாகும்.

இப்பணியிடங்கள் எவ்வித ஆதாயத்திற்கும் இடமளிக்காமல் முற்றிலும் கல்வித்தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நேர்மைக்கான அரசின் செயல்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். உங்களை பணியமர்த்திய அரசின்  எதிர்பார்ப்பானது தரமான சிகிச்சை மற்றும் சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதேயாகும்.  உங்களின் கல்விக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் மட்டுமே.  எனவே சுகாதார செவிலியர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் மக்களை நேசித்து உங்களது பணிகளைச் சிறப்பாக செய்ய வேண்டும்.

நமது மாவட்டத்தில்  11 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 39 கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 7 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 71 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 267 கிராமப்புற சுகாதார நிலையங்கள், 47 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 7 நகர்நல மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மகப்பேறு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பேறுகால சிசு இழப்பினை தவிர்ப்பதற்காகவும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தியதன் மூலம் மாவட்டத்தில் 4,560 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிதாகப் பணியில் சேரும் சுகாதார செவிலியர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாகவும், திறம்படவும் மேற்கொள்வதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் செய்முறைப் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் இப்பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இப்பயிற்சியின் மூலம் சுகாதார செவிலியர்கள் தங்களது பணிப் பொறுப்புகள், பொதுமக்களிடம் அணுகுமுறை, தாய் சேய் நலப் பராமரிப்பு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், அரசு சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் மருத்துவச் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து உரிய பயிற்சிகளைப் பெறுவர்.


எனவே, பயிற்சியில் பெறும் அறிவு மற்றும் அனுபவங்களைப் பயன்படுத்தி, தங்களுக்கு ஒதுக்கப்படும் பகுதிகளில் பொதுமக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, அர்ப்பணிப்பு உணர்வுடனும் பொறுப்புடனும் மருத்துவ சேவை ஆற்றிட வேண்டும் என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.பின்னர் செவிலியர் பயிற்சி வகுப்பிற்கான கையேட்டினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.இரா.அமுதாராணி, இணை இயக்குநர்(மருத்துவ நலப்பணிகள்) மரு.ஆ.காளிராஜ்,  மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.வே.யசோதாமணி(விருதுநகர்), மரு.பெ.இந்திரா(சிவகாசி), அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணிநியமன ஆணை பெற்ற செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News