25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளின் நலனை பாதுகாத்திடவும், கண்காணித்திடவும் செல்லபிள்ளை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளின் நலனை பாதுகாத்திடவும், கண்காணித்திடவும் செல்லபிள்ளை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்பம் அவர்கள் முன்னிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளின் நலனை பாதுகாத்திடவும், கண்காணித்திடவும் செல்லபிள்ளை திட்டத்தினை (14.11.2026) தொடங்கி வைத்தார்.இந்த செல்லப்பிள்ளை  திட்டத்தை குழந்தைகள் தினத்தில் தொடங்கி வைப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி பகுதிகளில் அதிகமாக குழந்தை திருமணங்கள் நடக்கின்ற காரணத்தால், பெண்கள் இளம் வயதிலேயே தாய்மைப்பேறு அடைகிறார்கள். பிறக்கும் குழந்தை எடை குறைவாகவும், ஊட்டச்சத்து குறைபாடோடும் பிறக்கின்றன. அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு அந்த தாய்மார்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

அதன்படி, விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஆலோசனை மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் வாரத்தில் ஐந்து நாட்களிலும் ஒரு ஆலோசகர் மற்றும்  ஒரு உறுதுணை பணியாளர் இருப்பார்கள்.  குழந்தைகளின் தாய்மார்களுக்கு தேவையான கங்காரு சிகிச்சை முறை என்று சொல்லக் கூடிய தாய் குழந்தைகளின் எடையை அதிகரிப்பதற்கு தேவையான ஆலோசனைகள் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் மூலம் வழங்கப்படும்.மேலும் அவர்களுடைய விவரங்கள் அனைத்தையும் பதிவேடுகளில் பதிவிறக்கம் செய்து மொத்தம் உள்ள 12 வட்டாரங்களுக்கு பகிர்ந்து அளிப்பார்கள்.அதன்படி அந்தந்த வட்டாரங்களில் உள்ள தாய்மார்களை கண்டறிந்து அவர்கள் வீட்டிற்கு சென்று குறிப்பிட்ட இடைவெளியில் பார்வையிட்டு தேவையான உபகரணங்களை கொண்டு சென்று அந்த குழந்தையின் எடை மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வார்கள்.

  இந்த திட்டம் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை, மருத்துவத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுத்தும்.விருதுநகர் மாவட்டத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமுள்ள குழந்தையாக இருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.இரா.அமுதாராணி, இணை இயக்குநர்(மருத்துவ நலப்பணிகள்) மரு.ஆ.காளிராஜ்,  மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.வே.யசோதாமணி(விருதுநகர்), மரு.பெ.இந்திரா(சிவகாசி), மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News