ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், சாத்தூர்-விருதுநகர் வழித்தடம் 23.06.2026 அன்று ஒரு நாள் மட்டும் மூடப்படும் என தென்னக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர்-விருதுநகர் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 407 Rly KM: 541/200-300 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் 23.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 06.00 வரையில், பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.
எனவே, 23.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, மேற்குறிப்பிட்டுள்ள வழித்தடங்களை மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழிகளை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0
Leave a Reply