ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை நிலம் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைதோறும் காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிலம் தொடர்பான மனுக்கள் அதிக அளவில் அளிக்கப்படுவதால் மேற்படி நிலம் தொடர்பான மனுக்களுக்கு உரிய தீர்வு வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை நிலம் (நிலம் எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, பட்டா இரத்து, இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் நிலச்சீர்திருத்தம் தொடர்பான மனுக்கள்) தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த மாதத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமானது 24.09.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை நடக்கவிருக்கிறது. இதற்கான மனுக்கள் பதிவு காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து வட்டங்களைச் சார்ந்த வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.மேலும் இது குறித்த விவரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ-பிரிவு, தொலைபேசி எண்: 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply