25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளைக்கு நிதியுதவி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளைக்கு நிதியுதவி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளைக்கு நிதியுதவியாக இராஜபாளையம் சமூக ஆர்வலர் திரு.புஷ்பராஜ் அவர்கள் சார்பில் ரூ.25,000/-க்கான காசோலையினை அவரது உதவியாளர் திரு.முகமது மீரான் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S, அவர்களிடம் (13.05.2024) வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளை என்ற ஒரு சமூக அமைப்பு மாவட்ட நிர்வாகம், தொழில் முனைவோர்கள், தன்னார்வலர்கள் இணைந்து உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இதனுடைய நோக்கம் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்/மாணவிகளுக்கு நல்ல திறமை மற்றும் கல்வியில் ஆர்வம் இருந்தும் பொருளாதார அடிப்படையில் வசதி குறைவு மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக தங்களுடைய கல்வியினை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் கல்வியினை தொடர உதவி செய்வதே இதன் நோக்கமாகும்.
இந்த விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்க விரும்புவோர் 04562-252525, 9445043157 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் கல்வி அறக்கட்டளைக்கு வங்கி வரைவோலை மூலம் நிதியுதவி வழங்க விரும்புவோர் CHAIRMAN/DISTRICT COLLECTOR, VIRUDHUNAGAR  என்ற பெயரிலும், வங்கிக் கணக்கில் வழங்க விரும்புவோர் CHAIRMAN/DISTRICT COLLECTOR VIRUDHUNAGAR KALVI ARAKATALAI, The Virudhunagar District Central Co-operative Bank Ltd, A/c No: 717770590, IFSC code: TNSC0011800, MICR Code: 626800007 என்ற வங்கிக்கணக்கிலும் நிதியுதவி அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News