மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு
விருதுநகர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் (20.08.2023) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் துலுக்கப்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.49.94 இலட்சம் மதிப்பில் மதுரை - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில்இருந்துஇ.சுந்தரலிங்காபுரம்வரைசாலைஅமைக்கப்பட்டுள்ளதையும்,இ.முத்துலிங்காபுரம் ஊராட்சி, நடுவப்பட்டி கிராமத்தில் ரூ.22 இலட்சம் மதிப்பில் நூலக கட்டடம் கட்டப்பட்டு வருவதையும்,இ.குமாரலிங்கபுரம் ஊராட்சி, கோவில்புலிகுத்தி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.55 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளதையும்,சின்னவாடி ஊராட்சி, தாதபட்டி கிராமத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மானியத்தில் வீடு கட்டப்பட்டு வருவதையும்,வி.முத்துலிங்காபுரம் ஊராட்சியில் நபார்டு நிதியின் கீழ் ரூ.10.02 கோடி மதிப்பில் வி.முத்துலிங்காபுரம் - சூரம்பட்டி சாலையில் அர்சுனா நதியின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு வருவதையும்,மேலசின்னையாபுரம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பில் புதிய ஊரணி அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், நடைபெற்றுவரும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தரமானதாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுத்தினார்.இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி கற்பகவள்ளி, திரு.சீனிவாசன், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply