வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (23.11.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அயன் கரிசகுளம் தொடக்கப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், அயன் கரிசல்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ.60,000/- மதிப்பில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, வடுகபட்டி ஊராட்சி அழகாபுரி கிராமத்தில் அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், கோவிந்தநல்லூர் ஊராட்சி ருத்திரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிய வீடு கட்டுவதற்கான ஆணையினை பயனாளிக்கு வழங்கி பணிகளை துவக்கி வைத்தார்.மேலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.78 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், வெள்ளை பொட்டல் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.18 இலட்சம் மதிப்பில் நர்சரி தோட்டத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கோட்டையூர் ஊராட்சி கிருஷ்ணாபுரம் கிராமத்தில், கனிம வள நிதி திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதுகேற்ற எடை, உயரம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply